Pandarathi puranam song lyrics


Movie: Karnan 
Music : Santhosh narayanan
Vocals :  Deva
Lyrics :  yugabharathi
Year: 2021
Director: Mari selvaraj
 


Tamil Lyrics

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு…

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா…

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு…

யோவ்…ஏமா…அழுகூடாது..அழுவகூடாது…
அடியா…மேளத்த…

Leave a Comment