Blood bath song lyrics


Movie: Asuran 
Music : G V prakash kumar
Vocals :  Arunraja kamaraj
Lyrics :  Arunraja kamaraj
Year: 2019
Director: vetrimaaran
 


Tamil Lyrics

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு
துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு
மிச்சம் என்று எதுவும் இன்றி

உந்தன் ஆயுதம்
என்னவென்பதை
உந்தன் கைகளில்
ஏந்தி நிற்கிறாய்

அந்த ஆயுதம்
என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேதப் பார்வை வேர்வை போல
ஊறிப் போன உலகிது

இறுகிப் போன மனமிது
இளகிப் போக மறுக்குது
பழகிப் பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும்
அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு
துன்ப மேகம் பொழியுது

ஏற்க மறுத்திடு
துரோகத் தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த
நீதி வாளை வீசிடு

வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

குருதித் தாகம் அடிக்குது
பழியை
தீர்க்கத் துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதற்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்பை ஊட்டத் தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டுக் கொதிக்கிறோம்

நீதி எதுவென
இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென
கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு

வீதி வெளியிலே
உந்தன் கோபம் காட்டிடு
நீதிக் குருதியை
அள்ளித் தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா
அசுரா வா
அசுரத் தலைகள் சிதற

வா அசுரா வா
அசுரா வா
அசுரப் பகைகள் கதற

வா அசுரா வா
அசுரா வா
அசுரப் பலிகள் கொடுக்க

வா அசுரா வா
அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

Leave a Comment