Ninaivugal Pon Ninaivugal Song Lyrics


Movie:  captain
Music : D.Imman
Vocals :  Madhan Karky
Lyrics :    Yuvan Shankar Raja
Year:2022
Director: Prajesh Sen
 

Tamil Lyrics

நினைவுகள் பொன் நினைவுகள்

நினைவுகள் பொன் நினைவுகள்

அடுத்த அடுத்த நொடி என்னென்று

அதை அறிய துடிக்கும் விழியே

முடிந்த முடிந்த நொடி பொன்னென்று

அதை நினைவில் பதிக்கும் விழியே

புதியென பூத்திடும் போதெல்லாமே

பழையன நீங்கிடும் தன்னாலே

இதுவரை வாழ்ந்த உன் வாழ்வெல்லாமே

நொடி போலெ கண்ணின் முன்னாலே

நினைவுகள் பொன் நினைவுகள்

விழியிலே உன் விழியிலே

நினைவுகள் பொன் நினைவுகள்

வழியிலே உன் வழியிலே

விடியல் எனும் கோளாலே

தினம் விழியை திறக்கும் உலகம்

துணிவை அணிந்து அதில் போனாலே

கடும் பணியில் திரையும் விலகும்

முதல் முதல் நினைவிது

இறுதியின் நினைவிது

ரெண்டும் என்றும் இல்லை

ஹே ரெண்டும் தேவை இல்லை

நடுவினில் வருவதும்

நிலைப்பதும் மறப்பதும்

உந்தன் கையில் இல்லை

ஹே முயல்வதும் தொல்லை

நீரோடையில் பிடிக்கிற மீனாக

உன் கையிலே ஒன்று

கையை விட்டு நழுவிடும் மீனாக

வீணானதோ ஒன்று

முடிந்தும் நீ தொடர்ந்திட

ஒரு வழியே பிறரது நினைவுகளாய்

நினைவுகள் பொன் நினைவுகள்

விழியிலே உன் விழியிலே

நினைவுகள் பொன் நினைவுகள்

வழியிலே உன் வழியிலே

நிகழும் நிகழும் இந்த நாள் ஒன்றில்

ஒரு நினைவு நினைவு மலரும்

நிலவு நிலவு என தேய்ந்தே தான்

சில நினைவு நினைவு உதிரும்

புதையலிலே விழும் வைரம் போலெ

மனதினிலே விழும் ஓர் நினைவு

இமை தடுத்தும் விழும் கண்ணீர் போலே

வெளியேறும் மறு நினைவு

நினைவுகள் பொன் நினைவுகள்

விழியிலே உன் விழியிலே

நினைவுகள் பொன் நினைவுகள்

வழியிலே உன் வழியிலே

Leave a Comment