Adi yendi pulla song lyrics


Movie: Kazhugu 2 
Music : Ousepachan
Vocals :  yuvan shankar raja
Lyrics :  mohan raja
Year: 2019
Director: Sathyasiva
 


Tamil Lyrics

அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல

உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல

ஒன்ன கண்ணுக்குள்ள
ஒட்டி வெச்சி ரசிப்பேனே
எந்தன் அன்பால் உந்தன்
ஆயுளைத்தான் வளப்பேனே

நீயும் கண்டுவச்ச
கனவெல்லாம் கேட்பானே
அதை ஒவ்வொன்னாக
உன் முன்னால
கொண்டாந்து வைப்பேன் நான்

அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல

உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல

மழை விட்டு போனாலும்
இலை சொட்டும் நீராக
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்
அது ஏனடி

இமை மீறி தேடுதே
விழிகளும் உன்னையே
இடைவெளி மாறுதே
இந்த நேரமே

உன்னோடு நான் என்னோடு நீ
எப்போதும் வாழ கேட்கிறேன்
என் பேரிலே உன் பேரினை
ஒன்றாய் கோர்க்கிறேன்

சந்தோசமும் கண்ணீர் தரும்
உன்னாலே இன்று பார்க்கிறேன்
உன் தூக்கம் பார்த்து
நானும் தூங்குவேன்

அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல

உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல

Leave a Comment